கொழும்பு - காலி வீதி விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
கொழும்பு - காலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் நேற்று (06) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த கர்ப்பிணிப் பெண்
இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவரும் சிறுமியொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்