பருத்தித்துறையில் விபத்துக்கிலக்காகி படுகாயமடைந்த வைத்தியர்
யாழ் - வடமராட்சி பருத்தித்துறை பேருந்து நிறுத்தத்திற்கு அண்மையில் மருதடி பகுதியில் இன்று (05.02.2024) மாலை வேளையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் ஒருவர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
மேலதிக சிகிச்சை
பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வைத்தியரும், எதிரே வந்த சிறிய ரக வாகனமும் எதிரெதிரே மோதியே குறித்த விபத்து இடம்பெற்றிருந்ததாகவும், பலத்த காயமடைந்த மருத்துவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கிருந்து தற்போது மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.