முச்சக்கர வண்டியில் மோதிய மோட்டார் சைக்கிள் ; இரண்டு பெண்களுடன் சென்றவருக்கு நேர்ந்த கதி
அத்துருகிரிய பகுதியில் நேற்று (04) வியாழக்கிழமை இரவு முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்துருகிரிய - மாலம்பே வீதியில் இரவு அத்துருகிரிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்னால், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, அதில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் முச்சக்கரவண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் 53 வயதுடையவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.