சிறுமி துஷ்பிரயோகம்; தேரருக்கு இன்று DNA பரிசோதனை
அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரைப் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானாதிபதி, பல்லேகம ஹேமரத்தன தேரர், டி.என்.ஏ (DNA) பரிசோதனைக்காக நிட்டம்புவ காவல்துறையினரால் இன்று (16) கொழும்பில் உள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு அநுராதபுர நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, தேரரின் டி.என்.ஏ மாதிரியைப் பெற்றுக்கொள்வதற்காக நிட்டம்புவ காவல்துறையினர் அவருக்கு அறிவித்திருந்தனர். அந்த உத்தரவை அடுத்து, சந்தேக நபர் இன்று கொழும்பு அரச இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்திற்குச் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.