கொழும்பில் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்
கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களில் நடைபெறவுள்ள வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (28) மற்றும் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதிகளில் குறித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
உற்சவ நிகழ்வுகளுக்காக அதிகளவிலான பக்தர்கள் மற்றும் வாகனங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதால், புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குறித்த நாட்களில் அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கவுள்ள சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
போக்குவரத்தை சீராக முன்னெடுப்பதற்காக தேவையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.