கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞன் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'குஷ்' போதைப்பொருள் தொகையுடன் 28 வயதான இளைஞன் ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வந்துள்ள நிலையில், அவரிடமிருந்து 2.7 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி
கைது செய்யப்பட்டவர் 28 வயதான இலங்கை பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது பயணப் பைகளுக்குள் மறைத்து இந்தப் போதைப்பொருள் தொகை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதை பொருள் 21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி உடையது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.