பலரையும் சிந்திக்கவைத்த யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு!
மாறிவரும் சமூகத்தின் முகம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. நல்லூர் ஆதீனத்தில் இடம்பெற்ற இந்த பேச்சு தற்பொதைய சமூகத்தையும் , புலம் பெயர் தமிழ் மக்களையும் சிந்தை கொள்ள செய்துள்ளது.
சமூகம் சார்ந்த பிரச்சனைகள் , மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் போலி முகங்களை தோலுரித்து காட்டுவதாக அவர்களின் பேச்சுக்கள் அமைத்துள்ளது.

சிந்திக்கவைத்த பேச்சு
சில புலம் பெயர் தமிழர்கள் தாயகம் வந்து செய்யும் அலப்பறைகள் தொடர்பிலும், தாயகத்தில் வாழும் எம் உறவுகள் புலம் பெயர் தமிழர்களை சார்ந்து வாழும் நிலை குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
போர் இடம்பெற்ற காலத்தில் புலம்பெயர் தேசங்களுக்கு தப்பியோடிய எம் இளம் தலைமுறையினர் பலர் , தாயகம் மீண்டெழுவதற்கு உதவி இருந்தமையினையும் சுட்டிகாட்டியுள்ளனர்.
அதேசமயம் தாயகத்தில் பொருளாதார , கல்வி வளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்களின் பெரும் பங்களிப்பு இருப்பதையும் அவர்கள் மறுக்கவில்லை.