பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்; மருத்துவமனைக்கு செல்ல இப்படி ஒரு அவலம்
தமிழகத்தில் பிரசவ வலியில் துடித்த நிலையில், முதல் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்ல வேண்டிய கர்ப்பிணி பெண்ணை, போதிய சாலை வசதி இல்லாததால், 6 கிமீ வரை அவரது உறவினர்கள் டோலி கட்டி தூக்கிச்சென்ற சம்பவம் ஒன்றும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய ஊராட்சிக்குட்பட்ட சுமார் 78 கிராமங்கள் இருக்கின்றன. இதில் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு மலை கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படும் போது முறையான சிகிச்சை கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாவதாக கூறப்படுகின்றது.
அதோடு போதிய சாலை வசதி இல்லாததால், அவர்களுக்கு பிரசவம் பார்க்க உரிய நேரத்தில் மருத்துவர்கள் கூட செல்ல முடியாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.