வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக புதிய செயலி அறிமுகம்
வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வின் போது, இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை 06 இலட்சம் ரூபாயிலிருந்து 20 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பெறுமதியான, கேள்வித்தன்மை கூடிய மனித வளத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தின் கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.