வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு ; சமூக ஊடகங்களில் வைரலான காணொளி

Sri Lanka Police Ampara Batticaloa Sexual harassment Social Media
By Sahana Nov 16, 2025 07:52 PM GMT
Report

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலையில் வீட்டுக்குள் நடத்தப்பட்ட தீடிர் சோதனையால் சிக்கிய குடும்பஸ்தர்

திருகோணமலையில் வீட்டுக்குள் நடத்தப்பட்ட தீடிர் சோதனையால் சிக்கிய குடும்பஸ்தர்

திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று (16) கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். இவரும் இவரது மனைவியும் திருகோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாடகை அடிப்படையில் பல வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு ; சமூக ஊடகங்களில் வைரலான காணொளி | Sexual Harassment Foreign Woman Video Viral Social

குறித்த வீடியோ மற்றும் அது தொடர்பான தகவல் ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரவிய நிலையில், இந்தச் சந்தேகநபர் திருக்கோவில் பிரதேசத்தில் கடலை விற்பனையாளர் என்று சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவியுள்ளது.

அதன்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் வசித்த இடங்கள் பலவற்றிற்குச் சென்று தேடுதல் நடத்தப்பட்டது.

அப்போது ஒரு இடத்தில் சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் தேசிய அடையாள அட்டைகளின் நிழற்பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் அடிப்படையில், அவரது மனைவியின் வீட்டிற்குச் சென்ற பொலிஸ் குழுவினர், குறித்த சந்தேகநபர் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதைக் கண்டறிந்தனர்.

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு ; சமூக ஊடகங்களில் வைரலான காணொளி | Sexual Harassment Foreign Woman Video Viral Social

இதனையடுத்து, அவர் நடமாடக்கூடிய இடங்கள் குறித்து மேற்கொண்ட தேடுதலின் போது, சந்தேகநபர் இன்று மாலை கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் போது அவர் தலையை மொட்டையடித்து தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உலகளவில் அதிக கவனத்தைப் பெறுவதற்கு, நமது அழகான சுற்றுச்சூழலும், இங்குள்ள மக்களின் விருந்தோம்பலும் காரணமாக இருப்பது இரகசியமல்ல.

இருப்பினும், சில கட்டுப்பாடு இல்லாத நபர்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் அதிகமாக உள்ளன.

அத்தகைய ஒரு சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று அண்மைக்காலமாகச் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், முச்சக்கர வண்டியை ஓட்டிச் செல்லும் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு ஒருவர் தனது பாலியல் உறுப்பைக் காட்டும் விதம் காட்டப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் நீராடச் சென்ற 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலி

காலிமுகத்திடல் நீராடச் சென்ற 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலி

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அந்தச் சம்பவத்தைச் சந்தித்த 24 வயதுடைய நியூசிலாந்துப் பிரஜை ஒருவரால் நேற்று (15) பிற்பகல் சுற்றுலாப் பொலிஸ் பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருக்கோவில் பொலிஸாரும் பொத்துவில் பொலிஸாரும் இணைந்து சந்தேகநபரைத் தேடும் விசாரணையை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகளின்போது, கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வந்த குறித்த நியூசிலாந்து யுவதி, ஒக்டோபர் 25 ஆம் திகதி அறுகம்பையில் இருந்து பாசிக்குடாவிற்கு முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, திருக்கோவில் பிரதேசத்தில் இந்த நபரைச் சந்தித்து அவருடன் பேசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் இந்த அநாகரிகச் செயலை அந்தச் சமயத்தில்தான் செய்துள்ளார்.

தென்னிலங்கையிலுள்ள நூலகத்தில் நூதன திருட்டு ; பொலிஸார் தீவிர விசாரணை

தென்னிலங்கையிலுள்ள நூலகத்தில் நூதன திருட்டு ; பொலிஸார் தீவிர விசாரணை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US