இளம் பெண்ணை வீடு புகுந்து கடத்திய நபர்; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிலாபம் மனுவங்கமவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த 18 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார்.
மாமியார் மீதும் தாக்குதல்
இந்நிலையில், பெண்ணின் வீட்டிற்கு விரைந்த அவரது கணவர் மற்றும் ஐந்து பேர் அடங்கிய குழுவினர் வலுக்கட்டாயமாக பெண்ணை துக்கிச்சென்று வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை, கடத்திச் செல்லும் போது அதனை தடுக்க வந்த பெண்ணின் தாயையும் குறித்த கும்பல் தாக்கியுள்ளனர்.
குறித்த பெண் சிலாபத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்ததாகவும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் போது 19 வயதுடைய இளைஞனை காதலித்து பின்னர் அவருடன் தம்புள்ளைப் பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் கணவரின் தொல்லை தாங்க முடியாமல் குறித்த பெண் அண்மையில் தனது வீடு திரும்பியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதேவேளை இந்த கடத்தல் சம்பவத்தின்போது பெண்ணின் தாய் மாத்திரமே வீட்டில் இருந்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You My Like This Video