நிலாவில் ஹோட்டல்! ஒருநாள் தங்க என்ன விலை தெரியுமா?..
நிலாவுக்கு செல்வது என்பது பூமியில் வசிசிக்கும் எல்லோருடைய கனவுதான். ஆனால் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை.
பள்ளியில் படிக்கும் போது நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என படித்திருக்கிறோம். ஆனால் அதன் பின் நிலவுக்கு பல நாடுகளையும் சேர்ந்த வீரர்கள் சென்றிருக்கிறார்கள்.

Gru space
பல நாடுகள் நிலவு தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில்தான் நிலாவில் ஹோட்டல் ஒன்றை திறக்கவிருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம். Gru space என்கிற நிறுவனம் நிலாவில் ஹோட்டல் ஒன்றை கட்டவிருக்கிறது.
ஒருநாள் இரவு தங்க இந்திய மதிப்பில் 90 கோடிக்கு மேல் செலவாகும் என்று சொல்லப்படுகிறது.. நிலாவில் ஹோட்டல் அமைப்புக்கான பணிகளை 2029ல் தொடங்கி 2032-ல் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த ஹோட்டல் நிறுவனம் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு ஆடம்பர ஹோட்டலை நிலாவில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது.
எதிர்காலத்தில் நிலவில் உள்ள இந்த ஹோட்டலில் தங்க விரும்புபவர்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை கட்டி முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிகிறது . அமெரிக்க மதிப்பில் இந்த நிலாவில் உள்ள ஹோட்டலில் தங்க ஒரு இரவுக்கு 4 லட்சம் 10 ஆயிரம் டாலர் செலவாகும் என தெரிகிறது.