விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்!
சட்டவிரோதமாக குஷ் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டுவந்த வெளிநாட்டவர் ஒருவர் நேற்று (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 34 வயதான ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் எனவும், தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருபவர் எனவும் குஷ் போதைப்பொருளை உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யும் மோசடியில் ஈடுபட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலையணையில் குஷ் போதைப்பொருள்
உறங்குவதற்குப் பயன்படுத்தும் தலையணையில் சூட்சுமமாக , சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய 01 கிலோ 50 கிராம் குஷ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். - 403 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றையதினம் 12.50 மணியளவில் வந்தடைந்துள்ளார்
. கைதான ரஷ்ய பிரஜை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதோடு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைமையகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.