நண்பர்களால் உயிரிழந்த குடும்பஸ்தர்
நண்பர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று மெதகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.
மோதலின்போது தடியினால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நண்பர்கள் தகராறு
உயிரிழந்தவர் 42 வயதுடைய ஒருவர் எனவும் அவர் கொடபோவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பர்கள் மூலம் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மெதகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.