சதுரங்க விளையாட்டில் உடைந்த 7 வயது சிறுவனின் விறல்
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் செஸ் ஓபன் போட்டிகள் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஏழு வயது சிறுவனின் கை விரல் எதிரே விளையாடிய ரோபோவால் உடைக்கப்பட்டுவிட்டது. இது குறித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த காணொளியில் சிறுவன் ரோபோவுக்கு எதிரில் அமர்ந்து செஸ் விளையாடுவது தெரிகிறது. ரோபோ தனக்கான தருணத்தில் காயை நகர்த்துகிறது.
அப்போது சிறுவன் அவனின் காயை நகர்த்துகிறான். ரோபோ உடனே அதே இடத்தில் காயை வைக்க அங்கு இருந்த சிறுவனின் கை விரல், ரோபோவால் நசுக்கப்பட்டது.
உடனே அருகிலிருந்தவர்கள் ரோபோவின் பிடியிலிருந்து சிறுவனின் கையை எடுக்க முயல்கின்றனர்.
சிறிது வினாடிகளில் சிறுவன் காப்பாற்றப்படுகிறான். இந்த சம்பவத்தைப் பற்றி ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பு அங்குள்ள ஊடகத்திற்கு அளித்த தகவலின் படி சிறுவனுக்கு கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு விதிமுறைகளைச் சிறுவன் பின்பற்றவில்லை.
அவன் கையை நகர்த்தும் முன் கவனிக்காமல் நகர்த்தியதில் இப்படி நடந்துவிட்டது. இந்த மாதிரியான நிகழ்வுகள் மிகவும் அரிதாக நடக்கக்கூடியவை என்று தெரிவித்துள்ளனர்.