நாடு திரும்பவிருந்த இலங்கையருக்கு ஐரோப்பாவில் நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்
இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் 58 வயதான இலங்கையர் உயிரிழந்துள்ளார்.
இத்தாலியின் நேபொலி நகரில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த இலங்கையர் , வாடு திரும்பவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குடும்பத்துடன் சேர்ந்து வாழ இருந்த நிலையில் துயரம்
வீதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது ஸ்கூட்டர் ஒன்றில் மோதி கீழே விழுந்தவரை வேன் ஒன்றும் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக அவசர மருத்துவ சேவைகள் வந்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குப் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய ஸ்கூட்டர் ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுளதுடன், அத்துடன் இலங்க்கையரை மோதிய வேன் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் இலங்கையில் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ் இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.