80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய 'கடல் அரக்கன்' கண்டுபிடிப்பு!
அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் புதைபடிவங்கள் (Fossils) மூலம், உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு பிரம்மாண்ட கடல் வேட்டைவிலங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு விஞ்ஞானிகள் 'டைலோசாரஸ் ரெக்ஸ்' (Tylosaurus rex) எனப் பெயரிட்டுள்ளனர்.
சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய பெருங்கடல்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த கொடூரமான வேட்டைக்காரன், சுமார் 43 அடி நீளம் கொண்டது எனத் தெரியவந்துள்ளது.

டைனோசர்களின் காலத்தில் கடலின் மிக ஆபத்தான உயிரினமாக இது வாழ்ந்துள்ளது. இதுவரை அறியப்பட்ட கடல் ஊர்வன இனங்களிலேயே மிகப்பெரிய 'மொசாசர்கள்' (Mosasaurs) என்ற வகையைச் சேர்ந்ததாக இந்த 'டைலோசாரஸ் ரெக்ஸ்' கருதப்படுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பு, பண்டைய கடல் வாழ் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி (Evolution) குறித்த விஞ்ஞானிகளின் நீண்டகாலக் கருத்துக்களை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.