அமெரிக்காவில் கௌதம் அதானி மீதான வழக்கு தள்ளுபடி
இந்தியப் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளை அமெரிக்க திங்களன்று (10) தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கைவிட நீதித்துறை எடுத்த முடிவு கவலைக்குரியது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள்
இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, 2024 நவம்பரில் நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றம் ஒன்றில் அதானி மற்றும் ஏழு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அதேவேளை அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றாகும். இது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான துறைமுகங்கள் முதல் சீமெந்து வரையிலும், எரிசக்தி முதல் ஊடகம் வரையிலும் குறிப்பிடத்தக்க அளவில் தனது இருப்பைக் கொண்டுள்ளது.
சூரிய ஆற்றல் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகக் கொடுத்ததாகவும், பில்லியன் கணக்கான டொலர்களைத் திரட்டுவதற்காக அமெரிக்க முதலீட்டாளர்களையும் வங்கிகளையும் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மேலும் அமெரிக்க நீதிக்கு இடையூறு விளைவித்ததாகவும் அரசுத் தரப்பு அமெரிக்காவின் சட்த்தரணிகள் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.