பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்
ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் அமைதியற்ற முறையில் செயற்பட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 07 பேர், சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துப் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் கடந்த 11 ஆம் திகதி ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த உண்ணாவிரதப் போராட்டப் பகுதிக்கு இராஜாங்கனை சத்தாரதன தேரர் வருகை தந்ததை தொடர்ந்து, கடந்த 13 ஆம் திகதி நண்பகல் அங்கு அமைதியற்ற சூழ்நிலை உருவாகியிருந்தது.
இந்த மோதலின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 07 பேரும் சிகிச்சைக்காக அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, அநுராதபுரம் நீதவான் மருத்துவமனைக்குச் சென்று சந்தேகநபர்களைப் பரிசோதித்ததன் பின்னர், கடந்த 13 ஆம் திகதி அநுராதபுரம் காவல்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.