அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம் ; நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

CID - Sri Lanka Police Sri Lanka Dollars Court of Appeal of Sri Lanka
By Sahana May 06, 2026 04:15 PM GMT
Report

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிக பணம், இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (06) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மனைவி உடல் எடை கூடியதால் யூடியூப் உதவியுடன் கொலை; கணவன் அரங்கேற்றிய சம்பவம்

மனைவி உடல் எடை கூடியதால் யூடியூப் உதவியுடன் கொலை; கணவன் அரங்கேற்றிய சம்பவம்

மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தபால் திணைக்களம் இந்தப் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

9 போலி மின்னஞ்சல்கள்

தபால் திணைக்களம் மேற்கொண்ட வெளிநாட்டுச் செலுத்துகை ஒன்று உரிய தரப்பினருக்குக் கிடைக்காமை தொடர்பான வழக்கின் விசாரணை இன்று கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் முதன்முறையாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம் ; நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை | 626 000 Owed United States Has Also Disappeared

சர்வதேச தபால் பணிகளுக்கான கொடுப்பனவு விபரங்களை 'Universal Postal Union' (UPU) எனும் உலகளாவிய தபால் ஒன்றியம் வழங்குகிறது.

எனினும், இந்த விவகாரத்தில் அவர்கள் வழங்கிய உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மாறாக, வேறொரு மின்னஞ்சல் முகவரியுடன் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்த வேண்டிய பணம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என 2023 ஜூன் முதல் 9 போலி மின்னஞ்சல்கள் ஊடாக தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றிற்கு தபால் திணைக்களம் பதிலளித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

2025 பெப்ரவரி 19 அன்று 435,864 அமெரிக்க டாலர்களும், 2025 ஒக்டோபர் 16 அன்று 190,891 அமெரிக்க டொலர்களும் தபால் திணைக்களத்தினால் மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன்படி 626,755 அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பு ஒன்றிற்குச் சென்றுள்ளது. இந்தப் பணம் சென்றடைந்த குறிப்பிட்ட நபர் அல்லது தரப்பு குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம் ; நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை | 626 000 Owed United States Has Also Disappeared

எனினும், தண்டனைச் சட்டம், கணினி குற்றச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக தெளிவாவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

விசாரணை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், தபால் திணைக்களத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பை கள ஆய்வு செய்வதற்கு இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவிற்கு அனுமதி வழங்கினார்.

இந்த வழக்கை மீண்டும் ஜூலை 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

திமுக விக்கெட்டுகளை தூக்கும் விஜய்; ஆட்டம் காணும் ஸ்டாலின் அணி!

திமுக விக்கெட்டுகளை தூக்கும் விஜய்; ஆட்டம் காணும் ஸ்டாலின் அணி!

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US