ஒரே நாளில் 563 சந்தேகநபர்கள் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நேற்று (12) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 563 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது மொத்தமாக 27,675 பேர் பரிசோதிக்கப்பட்டதுடன், அவர்களில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் 303 பேரும், திறந்த பிடியாணைகளின் அடிப்படையில் 169 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 73 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 123 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனுடன், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுடன் தொடர்புடைய 4,152 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.