தெற்கு கடற்கரையில் மிதந்து வந்த 51 பொதிகள்
தெற்கு கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 51 பொதிகளிலும் போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்படி குறித்த பொதிகளில் 'ஐஸ்' (Crystal Methamphetamine), ஹஷிஷ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் காணப்பட்டதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த போதைப்பொருள் தொகுதி 'உணக்குருவே சாந்தா' என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையினரின் கூற்றுப்படி, 3 பொதிகளில் ஹெரோயின் போதைப்பொருள் இருக்கலாம் எனவும், மிகுதி 48 பொதிகளில் 'ஐஸ்' போதைப்பொருள் (Crystal Methamphetamine) இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.