இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த 5,022 பேர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 5,222 பேரில் 5,022 பேர் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அஷேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 200 பேரில் 177 பேர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றவர்கள். ஏனைய 23 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இருப்பினும், இந்தத் தடுப்பூசி இரண்டையும் பெற்று உயிரிழந்தவர்களுக்கு ஏனைய நோய்கள் பல இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் என அடையாளம் காணப்பட்டு, இருப்பினும் நோய் அறிகுறிகள் தென்படாத 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கம்பஹா மாவட்டத்தில் இருப்பதாக நேற்று நடைபெற்ற மாவட்ட கொரோனா குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.