இலங்கையில் நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்ட 43 இந்திய மீனவர்கள்!
அத்துமீறி யாழ்.நெடுந்தீவு கடற் பகுதியில் புகுந்த 43 இந்திய மீனவர்களை நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்பரபிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்டதாலே இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இவர்கள் பயன்படுத்திய 06 இழுவைப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகளுக்கு இணங்க கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனர்வளை விரைவான அன்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்தி, சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிதட இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்திருந்தது.

நாட்டின் மீன்வளத்தைப் பாதுகாக்கவும், உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் மற்றும் பிற சட்டவிரோத செயல்களைத் தடுக்க, இலங்கை கடற்படை தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை முன்னெடுத்துள்ளனர்.