இலங்கையில் வெற்றிடமாகவுள்ள 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் ; அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் தொழிற் துறையில் சுமார் 400,000 வேலைவாய்ப்புகள் காலியாக உள்ள போதிலும், நாட்டின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்வதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொழிற்துறை
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழிற்துறைகளில் கடுமையான திறன் பற்றாக்குறை நிலவுவதோடு, ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இருப்பினும், தகுதியான தொழிலாளர்களைக் கண்டறிவதில் தொழிற்துறைத் தலைவர்கள் பெரும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் 49.2 சதவீதமாகக் காணப்படுகிறது.
இது கடந்த ஆண்டின் காலாண்டுடன் ஒப்பிடும்போது தொழிலாளர் சக்தி பங்கேற்பில் மெதுவான வளர்ச்சியைக் காட்டுகிறது என்றார்.