ஹெரொயின் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை
2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வவுனியா, மெனிக்பாம் பிரதேசத்தில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

ஆயுள் தண்டனை
இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.
எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு ஆயுள்தண்டனை தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுதும் பெருகி வரும் போதைப்பொருள் பழக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் சார் குற்றச்செயல்களுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை குறித்த தீர்ப்பும் தண்டனையும் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
இலங்கைசுற்றுலா குறித்த வழக்கின் சாட்சிகள் அரச சட்டவாதி சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.