இலங்கையில் எல் நினோவால் 80000 மேற்பட்டோர் பாதிப்பு
எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிதுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நிலையம், 7 மாவட்டங்களில் உள்ள 25,628 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

குடிநீர் விநியோகம்
மேலும், 23 பிரதேச செயலகப் பிரிவுகள் இந்த எல் நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 72,153 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வறட்சியான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் குடிநீரை விநியோகிப்பதற்குமான வேலைத்திட்டம், தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.