நள்ளிரவில் கணவனுக்கு அரங்கேறிய பயங்கரம் ; விடிய விடிய காத்திருந்து மனைவி செய்த செயல்
இந்தியாவின், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி, கணவரின் சடலத்துடன் விடிய விடிய வீட்டில் காத்திருந்து பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான விவசாயி மதுப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மது போதை
இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு குறித்த நபர் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி , வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவர்களது மூன்று குழந்தைகளும் நித்திரையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கணவர் உயிரிழந்த பின்னரும் மனைவி வீட்டிலேயே இருந்து, அவரது சடலத்தின் அருகில் விடிய விடிய காத்திருந்துள்ளார். பின்னர் அதிகாலையில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
பொலிஸாரிடம், கணவர் தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்ததாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அவரது தொல்லையை தாங்க முடியாமல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து மனைவியை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.