ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டத்தில் நனையவுள்ள 4 ராசிகள்! எவை தெரியுமா
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அதில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன.
இது மட்டுமின்றி, கிரக சேர்க்கைகள் மற்றும் வக்ர பெயர்ச்சி போன்றவைகளும் நிகழும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நுழையவுள்ளோம். கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில் இந்த மாதத்தில் மனிதர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்த மாற்றம் நிச்சயம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், அதாவது ஆகஸ்ட் 01 ஆம் திகதி புத்தி மற்றும் பேச்சின் கடவுளான புதன் சிம்ம ராசிக்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7 ஆம் திகதி இரண்டாவது ராசி மாற்றம் நிகழ்கிறது.
இந்நாளில் சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார். அதன் பின் ஆகஸ்ட் 10 ஆம் திகதி செவ்வாய் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார்.
பின்னர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். தொடர்ந்து ஆகஸ்ட் 21 ஆம் திகதி புதன் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார்.
இறுதியாக ஆகஸ்ட் 31 ஆம் திகதி சுக்கிரன் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். அவர் இவ்வாறு செல்கையில் ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என பார்க்கலாம்.
அந்தவகையில் கீழ் வரும் நான்கு ராசிகளுக்கு அதிஸ்டம் கொட்டப்போகின்றதாம்.
மேஷம்;-
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் மிகவும் ஆதரவாக இருக்கும். வேலையில் மிகவும் வெற்றிகரமான மாதமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கெட்ட விஷயங்கள் விரைவில் முடிவுக்கு வரும். பணியிடத்தில் உங்களின் பணி பாராட்டப்படும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன.
எனினும் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என சொல்லப்படுகின்றது.
மிதுனம்;-
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் இனிமையானதாக இருக்கும். வேலையில் தொடர்ந்து நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல பண வரவு உண்டு. இம்மாதத்தில் செலவுகள் குறையும். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
துலாம் ;-
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். திடீரென்று நல்ல பண வரவு கிடைக்கும். அனைத்து பக்கங்களிலும் மகிழ்ச்சி சூழ்ந்திருக்கும் மற்றும் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் ஒரு பெரிய ஒப்பந்தமும் கிடைக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி தரும் மாதமாக இருக்கும்.
சிம்மம்;-
ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்கள் பல சந்தோஷங்களை பெறுவார்கள். முடிக்கப்படாத பணிகள் விரைவாக முடிவடையும். இதனால் உங்கள் வருமானத்தில் நல்ல அதிகரிப்பு காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு இம்மாதத்தில் விரும்பிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
ஏனெனில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இம்மாதத்தில் உங்களுக்கு உள்ளது. இதனால் அனைத்து காரியங்களிலும் மற்றும் வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள் என்வும் கூறப்படுகின்றது.