நவம்பரில் உருவாகும் 4 ராஜயோகங்கள் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
நவம்பர் மாதத்தில் கிரக மாற்றங்களால் 4 விதமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அதுவும் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளன.
இந்த நவம்பர் மாதத்தில் செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் இருந்து, ருச்சக ராஜயோகத்தையும், குரு பகவான் ஹன்ஸ் ராஜயோகத்தையும், சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தையும் மற்றும் செவ்வாய் சூரியனால் ஆதித்ய மங்கள ராஜயோகமும் உருவாகவுள்ளன.

நவம்பரில் உருவாகும் 4 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதமானது மிகவும் அற்புதமாக இருக்கும். ஏனெனில் மாளவ்ய ராஜயோகம் 6 ஆவது வீட்டிலும், ருச்சக ராஜயோகம் 7 ஆவது வீட்டிலும் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இம்மாதத்தில் ஒரு தனித்துவமான ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் உருவாகும் 4 ராஜயோகங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைத் தரும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுகூர்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் உருவாகும் 4 ராஜயோகங்களால் இம்மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் புதிய சாதனைகளைப் புரிவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிட சூழல் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
