திருகோணமலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயம்
திருகோணமலை, அலெக்ஸ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை 6ஆம் கட்டைப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தவர்கள் சென்ற முச்சக்கரவண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என நால்வர் காயங்களுக்குள்ளாகினர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்றதற்கான காரணம் குறித்து திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.