இறக்குமதி, ஏற்றுமதி செயல்முறைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – வர்த்தக அமைச்சர்
தற்போதைய கொரோனா பரவலால் கடைகளை மூட அனுமதி வழங்கப்பட்டாலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறைகள், பொது பரிமாற்றத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இறக்குமதி, ஏற்றுமதி செயல்முறை மற்றும் பொது பரிமாற்றம் நிறுத்தப்பட்டால், மக்கள் பட்டினியால் இறக்க நேரிடும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவலால் விற்பனையாளர்கள் தங்கள் விருப்பப்படி கடைகளை மூடலாம், இருப்பினும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக எந்த சூழ்நிலையிலும் கொழும்பு புறக்கோட்டையில் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருந்து மற்றும் மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய அந்நிய செலாவணி தேவை. சீனி , பருப்பு மற்றும் உருளைக்கிழங்கின் விலையில் அதிகரிப்பு உள்ளது, இருப்பினும் பொருட்கள் உள்நாட்டில் கிடைத்தால் விலைகள் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இலவசமாக நிவாரணப் பொதியை வழங்க முடியும் என நம்புகிறேன், அது வீடுகளுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ள்ளார்.
பொலிஸார் அல்லது பிற அதிகாரிகள் கடைகளை திறக்க கட்டாயப்படுத்தபடமாட்டார்கள் என்றும்
அமைச்சர் உறுதியளித்துள்ளார்.