நான்கு நாட்களில் 33,076 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை
2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு நாட்களில் 33,076 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 5,065ஆகும்.

அத்துடன், ரஷ்யாவிலிருற்து 3,948சுற்றுலாப் பயணிகளும்,ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,914சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,862சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,790சுற்றுலாப் பயணிகளும், போலந்திலிருந்து 1,658 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 1,137 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,362,521 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.