தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; தாயுடன் தொழிற்சாலைக்கு சென்ற 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் இன்று (30) மாலை பரிதாபகரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரபல தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் வண்டியின் பின்புற சில்லுக்குள் சிக்கிய மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
தாயுடன் தொழிற்சாலைக்கு வந்திருந்த குழந்தை, பேருந்து அருகில் விளையாடியபோது இந்த விபத்து நேர்ந்ததாகவும், குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
இறந்த குழந்தை, தனது தாயுடன் பிரபல தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு வந்திருந்த நிலையில், தொழிற்சாலை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்பக்க சில்லுக்குள் திடீரென சிக்கியுள்ளார்.
தாயார் தொழிற்சாலைக்குள் சென்ற வேளையில், பின்வந்து விளையாடிய குழந்தை பஸ்ஸின் டயருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.