அரச வங்கியில் மாயமான 3.5 கோடி பணம்; இரு பெண்களிடம் விசாரணைகள் ; திடுக்கிடும் தகவல்கள்

Sri Lanka Police Kalutara Crime Sri Lanka Banks
By Sulokshi Jun 06, 2026 05:52 PM GMT
Report

  ஹொரண அரச வங்கி ஒன்றிலிருந்து 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபாய் பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளருடன் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்ட நல்லுருவ - மோதரவில பகுதியைச் சேர்ந்த இரு பெண்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பாணந்துறை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசாரணைகளின்போது , சந்தேக நபரான உதவி மேலாளர் இதற்கு முன்னர் நல்லுருவ பகுதியில் உள்ள அரச வங்கி கிளையொன்றில் பணியாற்றியுள்ளார்.

அங்கு வைத்து அவருக்கு அறிமுகமான, வட்டிக்குப் பணம் கொடுக்கும் பெண் ஒருவரிடமிருந்து அவர் 25 இலட்சம் ரூபாவைத் கடனாகப் பெற்றுள்ளார்.

அரச வங்கியில் மாயமான 3.5 கோடி பணம்; இரு பெண்களிடம் விசாரணைகள் ; திடுக்கிடும் தகவல்கள் | 3 5 Crore Goes Missing Horana Bank Two Women

வட்டிக்குப் பணம் கொடுக்கும் பெண் 

அக்கடனுக்காக வட்டியுடன் சேர்த்து இதுவரை 72 இலட்சம் ரூபாவை அவர் செலுத்தியுள்ளதுடன், அதன் பின்னரும் அவ்வப்போது தலா 10 இலட்சம் ரூபாய் வீதம் பலமுறை பணம் பெற்றுள்ளதாகப் புலனாய்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வங்கியிலிருந்து பணம் காணாமல்போன சம்பவத்திற்கு முதல் நாள், தான் வட்டிக்குக் கொடுத்த 37 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தருமாறு குறித்த பெண் சந்தேக நபருக்குத் குறுஞ்செய்தி (SMS) மூலம் அழுத்தம் கொடுத்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நான் அரசியலில் இருக்க மாட்டேன், ஆனால் நீங்கள் பார்ப்பீர்கள்; அருச்சுனா எம்பி ஆரூடம்!

நான் அரசியலில் இருக்க மாட்டேன், ஆனால் நீங்கள் பார்ப்பீர்கள்; அருச்சுனா எம்பி ஆரூடம்!

மேலும், நல்லுருவ பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணிடமிருந்தும், இத்தாலியிலிருந்து இலங்கை வந்திருந்த பெண் ஒருவரிடமிருந்தும் தலா 25 இலட்சம் ரூபாய் வீதமும், வேறொரு நபரிடமிருந்து 37 இலட்சம் ரூபாவும் இவர் கடனாகப் பெற்றுள்ளார்.

இவ்வாறாகப் பல தரப்பிலிருந்தும் பெறப்பட்ட கடன் தொகைகளைத் திருப்பிச் செலுத்துமாறு சந்தேக நபருக்குத் தொடர்ச்சியாகக் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலானால் கடத்தப்பட்டு பதின்மவயது சிறுமி கூட்டுத் பாலியல் வன்புனர்வு; தமிழர் பகுதியில் சம்பவம்

காதலானால் கடத்தப்பட்டு பதின்மவயது சிறுமி கூட்டுத் பாலியல் வன்புனர்வு; தமிழர் பகுதியில் சம்பவம்

வங்கியில் பணம் காணாமல்போனதாகக் கூறப்படும் தினத்திற்கு அடுத்த நாள், சந்தேக நபரான உதவி மேலாளர் வேறொரு வங்கிக் கிளைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவிருந்தமையும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

பாணந்துறை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் விஸ்வநாத்தின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் இரு பெண்களிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US