24 மணிநேர விசேட பேருந்து சேவை முன்னெடுப்பு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர் உள்ளிட்ட இடங்களுக்குத் திரும்புவதற்காக விசேட பேருந்து சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 24 மணிநேர சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கண்டி - தலதா மாளிகை புனித தந்தத்தாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்காகப் பயணிப்பவர்களுக்கு விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கண்டி - கொழும்பு வீதியூடாக சுமார் 150 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் 1,300 மில்லியன் ரூபாயினை வருமானமாக ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.