மொரட்டுவையில் ஆறு மாதங்களில் 23 தொழுநோயாளிகள்; ஆறு பேர் குழந்தைகள்
கடந்த ஆறு மாதங்களில் 23 சந்தேகத்திற்கிடமான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். மொரட்டுவையில் உள்ள எகொட உயன சுகாதார மருத்துவ அதிகாரி பகுதியிலேயே தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட்வர்களில் ஆறு பேர் குழந்தைகள் என எகொட உயன சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அறிக்கைகள் தோல் நோய் மருத்துவமனைக்கு
இதுவரை 31 சந்தேகத்திற்கிடமான தொழுநோயாளிகளின் அறிக்கைகள் தோல் நோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் தொழுநோயாளிகள் இருக்கலாம் என்றும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நோயாளிகளின் அதிகரிப்பு குறித்து தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.