கருத்தடை சாதனத்தை அகற்றுவதாக பாலியல் வன்கொடுமை; இலங்கையில் பகீர் சம்பவம்
அனுராதபுரத்தில் , ஒரு குழந்தையின் தாயின் உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 வயதான இளம் தாய் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
1.5 மில்லியன் ரொக்க இழப்பீடு
பெண்ணை பாலிய வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி நளின் டி ஹேவாவசம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 1.5 மில்லியன் ரொக்க இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இழப்பீட்டுத் தொகைக்கு கூடுதலாக, ரூ. 100,000 ரொக்க அபராதம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இழப்பீடு வழங்கப்படாவிட்டால், மருத்துவருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு சென்ற பெண் மீது மருத்துவர் மீ பாலியல் வன்கொடுமை செய்தமை நீதிமன்றில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து மேற்படி தண்டனை மருத்துவருக்கு வழங்கப்பட்டுள்ளது.