அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்
குருநாகல் - கிரியுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல - கிரியுல்ல வீதியில் முத்துகல பகுதியில், இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கிரியுல்லவிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த டிப்பர் லொரியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிரியுல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
சடலம் தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.