இலங்கையில் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகளுக்கு நேர்ந்த கதி
இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

உயிரிழப்புகள்
இதில், 33 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 26 யானைகள் சட்டவிரோத மின்சார வேலிகள் அல்லது மின்கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.
வெடிபொருள் கலந்த உணவை உட்கொண்டதால் 26 யானைகளும், விஷம் காரணமாக 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.
இதேவேளை, ரயில் விபத்துகளில் 2 யானைகளும், வீதி விபத்துகளில் 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.
விவசாயக் கிணறுகளில் தவறி விழுந்ததில் 7 யானைகளும், நீரில் மூழ்கியதில் மேலும் 7 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.