2026ல் உலகம் மாற்றம் ; பகீர் கிளப்பிய பாபா வாங்கா கணிப்புகள்
2026- ஆம் ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. 2026-ல் மிகப் பெரிய போர் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பாபா வாங்கா கணித்து வைத்துள்ளார்.
2026 ஆம் ஆண்டில் AI தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியைக் காணும். ஆனால் அது மனித வாழ்க்கைக்கு ஒரு பெரிய சவாலாக மாறக்கூடும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் ஆழமாக ஊடுருவும் என்றும் கணித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பூமிக்கு வெளியே இருக்கும் உயிரினங்களுடன் மனிதர்கள் முதல் முறையாகத் தொடர்புகொள்வார்கள் என்று அவர் கணித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு பெரிய விண்கலம் பூமிக்குள் நுழையக்கூடும் என்பதும் இதில் அடங்கும்.
மனித வரலாற்றில் முதல் முறையாக, வேற்றுகிரகவாசிகளுடன் நேரடி தொடர்பு சாத்தியமாகும் என்பது அவரது மிகவும் வியக்கத்தக்க கணிப்பு. இது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்று. மேலும், 2026ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று இந்த மதிப்பீடுகள் கூறுகின்றன.

எதிர்காலத்தில் மனிதர்கள் மிகவும் சிறியதாயினும், மிக சக்திவாய்ந்த ஒரு மின்னணு சாதனத்தை முழுமையாகச் சார்ந்து வாழத் தொடங்குவார்கள்.
அந்தச் சாதனம் மனிதர்களின் தினசரி வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் மட்டுமல்ல, ஒருவருடன் ஒருவர் பழகும் முறையையும், அவர்களின் மனநிலையையும் மாற்றும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.