சர்வதேச சந்தை பதற்றம் ; இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள்
சர்வதேச சந்தையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய வர்த்தகப் போர் அச்சம் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, நேற்று (21) ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை சடுதியாக 15,000 ரூபாயால் அதிகரித்திருந்தது.
சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழலே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும், இன்று (22) தங்கத்தின் விலையில் ஓரளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அந்தவகையில், இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று தற்பொழுது 381,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,450 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,057 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலையுயர்வு மற்றும் வீழ்ச்சி காரணமாக நகை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பமான நிலை காணப்படுவதுடன், வரும் நாட்களில் சர்வதேச சந்தையின் போக்கைப் பொறுத்தே உள்நாட்டு விலையில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.