பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி!
பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் ரூபா பணமும் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்தப் பெண் தனது காதலனுடன் இருக்கும் ஒளிப்படத்தை வைத்து, பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்த பொலிஸார், ஒளிப்படத்தைக் காட்டி மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் இலஞ்சமும் பணமும் கோரியுள்ளனர்.
இதேவேளை, பொலிஸாரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
பெண் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி 2 பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 03-11-2024 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதான் உத்தரவிட்டுள்ளார்.