இலங்கைச் சுங்கத்தினால் 2.8 மில்லியன் சிகரெட்டுகள் அழிப்பு
இலங்கைச் சுங்கத்தினால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான சிகரெட்டுகள் இன்று (29) கொழும்பில் அழித்தொழிக்கப்பட்டதாக சுங்க அத்தியட்சகர் சந்தன புச்சிஏவா தெரிவித்துள்ளார்.
சுமார் 2.8 மில்லியன் சிகரெட்டுகளும் புகையிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட சில 'மொலாசஸ்' (Molasses) இது புகைப்பிடிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.

அத்தோடு 2026 ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 2026 ஜூலை 27 ஆம் திகதி வரை அதாவது சுமார் மூன்று மாத காலப்பகுதியில் இலங்கைச் சுங்க அதிகாரிகளால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையே இவ்வாறு 2.8 மில்லியன் என்ற அளவில் அழிக்கப்பட்டன.
இது சுங்க அதிகாரிகள் பகலும் இரவும் சேவையாற்றி பயணிகளின் பிரயாணப் பொதிகளில் மறைத்துக்கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளாகும். இவை ஒரே சந்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்டவை அல்ல.
10 பைகள் இருந்தால் அவை 10 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்டவையாகும் சுங்க அத்தியட்சகர் சந்தன புச்சிஏவா தெரிவித்துள்ளார்.