இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவரை விடுவித்த மல்லாகம் நீதிமன்றம்
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட கிருஷ்ணகுமார், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கடந்த 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட அவர் 10 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றிருந்தார். அத்தண்டனை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருந்தது.

கிருஷ்ணகுமார் கைது
கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து சைனைட் குப்பிகள் கண்டெடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடுக்கப்பட்டது.
ஆனால், ஆயுத தொடர்புகள் எதுவும் தனக்கு இல்லையென அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். எவ்வாறாயினும் தண்டனை காலம் நிறைவு பெற்று 11 ஆண்டுகள் சென்ற பின்னர், இவர் தாயகம் திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்புக் கொண்டு அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை சமூக செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந் முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.