இரவில் சிக்கிய18 வயது இளைஞன் ; சோதனையில் சிக்கிய பொருட்கள்
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கம்பஹா எந்தேரமுல்ல பகுதியில் பெருமளவான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எந்தேரமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்பயா மாவத்தை பகுதியில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்ப்பெற்றிருந்த இரகசிய தகவலுக்கமைய இந்த விசேட சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 213 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 516 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.