நண்பர்களிடம் மனைவியை விற்ற கணவன் ; பல நாட்கள் பலமுறை மாறி மாறி கூட்டாக அரங்கேறிய கொடூரம்
இந்தியாவில் குஜராத் பிரதேசத்தில் நண்பர்களிடம் கணவர் மனைவியை விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கு
ஜராத்தின் பலான்பூர் நகரில் வசித்து வந்த ஒருவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவருடைய மனைவியை காணவில்லை என பொலிஸில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர்கள் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

கூட்டு பாலியல் வன்கொடுமை
இதன்போது கணவர் அவருடைய நண்பர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு பணத்தை பெற்று கொண்டு மனைவியை விற்றுள்ளார். குறித்த பெண்ணை அறையில் அடைத்து வைத்த நண்பர்கள் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை என பல கொடுமைகளை செய்துள்ளனர்.
7 நாட்களாக இந்த கொடூரம் தொடர்ந்துள்ளது. அவருடைய காதணிகளையும் திருடி கொண்டனர்.
இந்த வழக்கில் தீவிர விசாரணை செய்து, மறைத்து வைக்கப்பட்ட அந்த பெண்ணை மீட்டுள்ளதுடன் பொலிசார் குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளனர்.
குறித்த கணவர் திருமணம் நடந்து 12 ஆண்டுகள் ஆனபோதும், வேறு சமூக பெண்கள் 2 பேரிடம் தகாத உறவில் இருந்துள்ளான். மனைவியை பிடிக்கவில்லை என்பதற்காக அவரை விவாகரத்து செய்ய விரும்பியுள்ளார்.
மனைவியை நண்பர்களிடம் விற்று விட்டு, பணம் பெற்று கொண்டு, வேறொரு பெண்ணை வீட்டுக்கு கொண்டு வர விரும்பியுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.