எம்.எஸ் தோனியில் கவனத்தை ஈர்த்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 17 வயது மாணவன்!
2024 ஐபிஎல் தொடர்பில் எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மாணவன் குகதாஸ் மாதுலன் உள்வாங்கப்பட்டுள்ளார்.
குறித்த தொடர்பில் கலந்துகொள்வதற்காக யாழை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனான மாதுலன், அவசரமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
யாழ். மாலிங்க என அழைக்கப்படும் 17 வயதான யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் மாணவனான குகதாஸ் மாதுளனின் யோக்கர் பந்து வீச்சு பலரது கவனத்திற்கு ஈர்த்து வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான லசித் மாலிங்கவின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் தற்போது ஐ.பி.எல் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது கிரிக்கெட் வீரர் மலிங்காவைப் போன்ற பந்துவீசும் குகதாஸ் மதுலன், போட்டித் தொடரில் வீசிய யார்க்கர் (YORKER) பந்தை எம்.எஸ்.தோனி பார்த்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வலை பந்து வீச்சாளராக இணைக்க பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.