இலங்கையில் இன்று 149 தடுப்பூசி நிலையங்கள் சேவையில்.. முழு விபரம்
நாடு முழுவதும் இன்று 22 மாவட்டங்களில் மொத்தம் 149 கொரோனா தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 09, 11 மற்றும் 5 தடுப்பூசி நிலையங்களில் செயற்பாட்டில் உள்ளன.
இது தவிர இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மொபைல் தடுப்பூசி நிலையங்களும் செயற்பாட்டில் உள்ளன.
இதேவேளை இலங்கையில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு கொவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 7,042,418 தனிநபர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று மொத்தமாக 188,052 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.