14 இளைஞர்கள் அதிரடியாக கைது
மஹரகமை - டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.
அதோடு ஒரு பந்தயப் போட்டி என்றும், இணையத்தில் வெளியான செயலி மூலம் அவர்கள் இதில் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
பரிசுத் தொகைக்கு மேலதிகமாக அழகான பெண்
போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு மேலதிகமாக அழகான பெண் வேடமணிந்த இளைஞர் ஒருவரும் வழங்கத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைதான 14 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் போட்டியில் பயன்படுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.